செய்திகள் சில வரிகளில்

தட்சிண கன்னடா, மங்களூரில் நேற்று முன்தினம் வக்ப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இதில் போலீசாரை பணி செய்ய விடாமலும், போக்குவரத்து இடையூறு செய்ததாகவும் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மங்களூரு போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் நேற்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 2024 -- 25 நிதியாண்டில் மட்டும் 54.9 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகம். இந்த ஆண்டு கரும்புகளை அரவை செய்வதற்கான தொகை குறைந்துள்ளதால், விவசாயிகளுக்கு 90 சதவீதம் பணம் அளிக்கப்பட்டு விட்டதாக சர்க்கரை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாம்ராஜ்நகர், துளசிகேர் கிராமத்தில் நோய்வாய்ப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக டோலியில் சுமந்து செல்லும் வீடியோ சமீபத்தில் வைரலானது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம், மலை மஹாதேஸ்வரா மலை மேம்பாட்டு ஆணையம் சார்பாக அந்த கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது.

ஆம்புலன்ஸ் வந்தது

Advertisement