காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்

பெலகாவி: 'எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் நான் தேர்ச்சி பெற்றால் தான், என்னை என் காதலி ஏற்றுக்கொள்வார். தயவு செய்து என்னை தேர்ச்சி பெற வையுங்கள்' என, தேர்வு விடைத்தாளில் மாணவன் கடிதம் எழுதி, 500 ரூபாய் அனுப்பிய படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, மார்ச் 21 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடந்தது. தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
இந்நிலையில், பெலகாவியில் தேர்வு விடைத்தாள்களை திருத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர், வித்தியாசமான குறிப்பால் அதிர்ச்சி அடைந்தார்.
அதில், 'சார், மேடம், என் காதல் உங்களின் கையில் தான் உள்ளது. நான் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் வெற்றி பெற்றால் தான், என்னை ஏற்றுக்கொள்வதாக என் காதலி தெரிவித்துள்ளார். எனவே, இதில் 500 ரூபாய் வைத்துள்ளேன். இதை எடுத்துக் கொண்டு, டீ குடியுங்கள். எப்படியாவது என்னை தேர்ச்சி பெற வைத்து விடுங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.
தேர்வு விடைத்தாளில், தேர்வு எழுதும் மாணவர்கள் அவர்களின் 'வருகை எண்' மட்டுமே குறிப்பிடுவர். இதனால், அவரின் பெயர் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பெலகாவி மாவட்டம், சிக்கோடியை சேர்ந்தது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
காதலி தன்னை காதலிக்க வேண்டும் என்பதற்காக, விடைத்தாளில், ஆசிரியருக்கு 'கோரிக்கை' கடிதத்துடன் 500 ரூபாய் 'லஞ்சம்' கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும்
-
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை: ரூ.110 கோடியில் பணி விரைவில் துவக்கம்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது
-
பைக் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகள் பலி
-
கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மெக்கானிக்கை கொன்ற மனைவி கைது