சக்கரக்கோட்டை கண்மாயை  ராம்சார் பகுதியாக அறிவித்தும் பயனில்லை

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் உள்ள சக்கரக்கோட்டை கண்மாய் ராம்சார் பகுதியாக அறிவிக்கப்பட்டும் முறையான பராமரிப்பின்றி கழிவு நீர் தேங்கும் பகுதியாக மாறி வருகிறது. ராமநாதபுரத்தில் தேர்த்தங்கல், சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயப் பகுதிகள் ராம்சார் தலங்களாக வனத்துறையினரால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.

இதில் சக்கரக்கோட்டை கண்மாய் கடல் மட்டத்திலிருந்து குறைவான உயரம் கொண்ட சதுப்பு நிலமாகும்.

இவை பறவைகள் சரணாலயம் மட்டுமின்றி பல்லுயிர் இனப்பெருக்கம் நிறைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

575 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் கண்மாய் நீர் பிடிப்பு பகுதியில் நாட்டு கருவேல மரங்கள் குறைந்து சீமைக்கருவேல மரங்கள் அதிகரித்துள்ளன.

மேலும் 2000 ஏக்கர் பாசன பரப்பை கொண்டுள்ள இந்த கண்மாயின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள நீரில் கழிவு நீர் கலப்பதால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படுகிறது. பறவைகள் சரணாலயமாக இருந்தும் பறவைகள் வரத்து குறைந்துள்ளது.

இந்த கண்மாய் 14 மடைகள், 16 கலுங்குகளுடன் உள்ள நிலையில் பராமரிப்பு செய்து கழிவு நீர் கலக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement