கால்நடை காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
திருவாடானை : கால்நடைகளுக்கான காப்பீட்டு திட்டத்திற்கு ஏப்.,24 க்குள் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு வானிலை அடிப்படையிலான காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மாடுகள் மற்றும் எருமைகளுக்கு வானிலை காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து காப்பீடு திட்ட அலுவலர்கள் கூறியதாவது:
கோடை காலத்தில் வெப்ப நிலை உயரும் போது கால்நடைகள் பாதிக்கப்படும். இது கால்நடை விவசாயிகளுக்கு குறிப்பாக கோடைகால வெயில் மற்றும் பிற வானிலை மாற்றங்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை இதன் மூலம் சரி செய்து கொள்ளலாம்.
ஒரு கால்நடைக்கு காப்பீட்டு தொகை ரூ.10 ஆயிரம். காப்பீட்டு கட்டணம் ரூ.600. விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் கொடுத்து ஏப்.,24க்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
தாலுகா அளவில் வெப்ப நிலையை பொறுத்து ஏதேனும் மாற்றம் இருப்பின் இழப்பீடு தொகை வழங்கப்படும். தகவல்களுக்கு 63834 37353 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
மேலும்
-
தி.மு.க.,வுக்கு சாதகமில்லாததால் கூட்டுறவு தேர்தல் தள்ளிவைப்பு
-
தமிழகம், புதுச்சேரியில் 25 வரை மிதமான மழை
-
கல்வான், சியாச்சினில் அலைபேசி சேவை 18,000 அடியில் 5ஜி சேவை வழங்கி சாதனை
-
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை: ரூ.110 கோடியில் பணி விரைவில் துவக்கம்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்