பரிசு வழங்கும் விழா

தேனி : தேனி கம்மவார் கலை, அறிவியல் கல்லுாரியில் அனைத்து துறை மன்றங்கள் சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கல்லுாரி செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். விழாவில் தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, கல்லுாரி பொருளாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் போட்டித்தேர்வுகளுக்காக வடிவமைக்கப்பட்ட தமிழ்க்கதம்பம் எனும் நுால் தமிழ்த்துறை சார்பில் வெளியிடப்பட்டது.

Advertisement