பாலியல் தொல்லை: கொத்தனார் கைது

திருப்புத்துார்: சிவகங்கை ஒன்றியம்அம்மச்சிபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் குமார் (எ) செந்தில்குமார் 45. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர். பெண் குழந்தை சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டது. செந்தில்குமார் கொத்தனார் வேலை பார்க்கிறார்.

அண்மையில் அவர் கட்டட வேலை பார்த்த பகுதியில், அருகிலுள்ள வீட்டில் இருந்த 5-ம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். மாணவி பள்ளி ஆசிரியையிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். சைல்டு லைன் 1098க்கு தகவல் அளித்தனர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மாணவியிடம் விசாரித்தார். பெற்றோர் திருப்புத்தூர் மகளிர் போலீசாரிடம் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செந்தில்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement