சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் தேவை

சிக்கல் : சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தேவைக்கான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஓராண்டிற்கு முன்பு புதியதாக கட்டப்பட்டது. இங்கு உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்படாத நிலை தொடர்கிறது. நோயாளிகள் கூறியதாவது:

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

இங்கு காவிரி குடிநீர் வசதி இல்லாத நிலை தொடர்கிறது. எனவே சிக்கல் ஊராட்சி நிர்வாகத்தினர் காவிரி குடிநீர் இணைப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement