விவசாயிகள் கோரிக்கை

பரமக்குடி : பரமக்குடி சப் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் அபிலாஷா கவுர் தலைமை வகித்தார். வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பரமக்குடி, பார்த்திபனுார், முதுகுளத்துார் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், கரும்பு தோட்டத்தை முற்றிலும் அழிக்கிறது.

தொடர்ந்து மழை வெள்ள பாதிப்புகளில் பயிர்கள் சேதம் அடைவதுடன், இது போன்ற காட்டு விலங்குகளாலும் பாதிப்பு ஏற்படுவதால் நஷ்டம் ஏற்பட்டு மன உளைச்சல் உண்டாகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement