தி.மு.க., வின் ஒத்துழைப்போடு நீட் தேர்வு; முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு

திண்டுக்கல் : '' காங்., ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க., வின் ஒத்துழைப்போடுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது '' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே அ.தி.மு.க., மாணவரணி சார்பில் நடந்த நீட் விலக்கு என்ற பொய்யான வாக்குறுதி அளித்து மாணவர்கள் இறப்பிற்கு காரணமான தி.மு.க., அரசை கண்டித்தும்,பலியான 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தலைமை வகித்த அவர் பேசியதாவது:

தி.மு.க., ஆட்சி அமைந்ததும் நீட் விலக்கு கொண்டுவரப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அக்கட்சி ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் இதுவரை நீட் தேர்வால் 22 மாணவர்கள் பலியாகி உள்ளனர். காங்., ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க., வின் ஒத்துழைப்போடு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. தி.மு.க., மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்து விட்டு அத்திட்டங்களுக்கு எதிராக போராடுவது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒத்துழைப்புடன் காங்., அரசால் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கச்சத்தீவு மீட்பு என நாடகமாடி வருகின்றனர் என்றார்.

மாநில அமைப்பு செயலாளர் மருதுராஜ், ஜெ., பேரவை இணைச் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வேனுகோபாலு, பிரேம்குமார்,மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் ராஜ்மோகன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள்மோகன், சேசு சுப்பிரமணி, முரளி, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகரன், முருகன், முன்னாள் மாநில மாநிலபொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், இளைஞர் அணி செயலாளர் ராஜன், சார்பு அணி நிர்வாகிகள் ஜெயபால், பழனிச்சாமி கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை மேற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜேஷ் கண்ணன், கிழக்கு மாவட்ட செயலாளர் கோபி செய்திருந்தனர்.

Advertisement