நக்சல் இல்லா முதல் கிராமம்; சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு

சுக்மா: சத்தீஸ்கரின் படேசட்டி கிராமத்தில், பாதுகாப்பு படையினர் முன், 11 நக்சல்கள் சரணடைந்ததால், அம்மாநிலத்தின் நக்சல் இல்லாத முதல் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அரசின் நலத்திட்டங்களை மேற்கொள்ள 1 கோடி ரூபாய் நிதியுதவி கிடைக்க அக்கிராமம் தகுதி பெற்றுள்ளது.
சத்தீஸ்கரில், சுக்மா மாவட்டம் உட்பட ஏராளமான மாவட்டங்கள் நக்சல் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது.
இதையடுத்து, மக்களுக்கான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியாமல் மத்திய, மாநில அரசுகள் தவித்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து நக்சல் ஆதிக்கத்தை வரும் 2026ம் ஆண்டு மார்சில் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதன்படி, நக்சல்களை குறிவைத்து தாக்குதல்களை பாதுகாப்புப் படையினர் நடத்தி வருகின்றனர்.
இதுதவிர, சரணடையும் நக்சல்களுக்கு, உரிய நலத்திட்டங்களை வழங்கி திருந்தி வாழவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுக்மா மாவட்டத்தின் படேசட்டி கிராமத்தில் உள்ள 11 நக்சல்கள், தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, பாதுகாப்புப் படையினர் முன் நேற்று சரணடைந்தனர். இதையடுத்து, அக்கிராமத்தில் நக்சல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லாத நிலை உருவாகி உள்ளது.
இதன் காரணமாக சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல்கள் இல்லாத முதல் கிராமம் என்ற அடையாளத்தை படேசட்டி கிராம பஞ்சாயத்து அடைந்துள்ளது.
இதன்படி, சத்தீஸ்கர் நக்சல் மறுவாழ்வு திட்டம் - 2025ன் படி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள 1 கோடி ரூபாய், இக்கிராம பஞ்சாயத்திற்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும்
-
என்னை தேர்ச்சி பெற வைத்திடுங்கள்: விடைத்தாளில் ரூ.500 உடன் 10ம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை
-
போன் பேச்சு ஒட்டு கேட்கும் தமிழக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
நடுவானில் 3 மணி நேரம் வட்டமடித்த விமானம்; ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சனம்
-
மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு; ரூ.பல கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயற்சித்த 8 பேர் கைது
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக உயர்வு
-
3000 ஆண்டு பழமையான கல்வட்டம் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு