வர்த்தக துளிகள்

எஸ்.ஐ.பி., கணக்குகளை மூடுவது அதிகரிப்பு

கடந்த 2022ம் ஆண்டுக்குப் பின், நடப்பாண்டு ஜனவரி முதல், முதல்முறையாக இந்தியா மியூச்சுவல் பண்டு துறையில், புதிதாக துவங்கப்படும் எஸ்.ஐ.பி., கணக்குகளை விட, மூடப்படும் கணக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தனியார் முதலீட்டு வங்கியான எலாரா கேப்பிடல் தெரிவித்துஉள்ளது.



'அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்கள் வரிவிலக்கு பெற தகுதியானவை'

டி.பி.ஐ.ஐ.டி., எனப்படும் தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகள் மற்றும் 'படிவம் - 2' ஐ தாக்கல் செய்யும் நிறுவனங்கள், வருமான வரிச்சட்டம் 1961ன் கீழ் பல்வேறு வரி விலக்கு மற்றும் சலுகைகளை பெறத் தகுதியானவை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.




நவரத்தினங்கம், ஆபரண ஏற்றுமதி 4 ஆண்டுகளில் இல்லாத சரிவு



நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி, நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த நிதியாண்டில் 2.45 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் 2.77 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், 11.72 சதவீதம் குறைவு என்று நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்து உள்ளது.



பட்டை தீட்டப்பட்ட வைர ஏற்றுமதி 20 ஆண்டுகளில் இல்லாத சரிவு




பட்டை தீட்டப்பட்ட வைரத்தின் ஏற்றுமதி, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த நிதியாண்டில் சரிந்துஉள்ளது. உலகில் பட்டை தீட்டப்படும் 10 வைரங்களில் ஒன்பது இந்தியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு இதன் ஏற்றுமதி 16.80 சதவீதம் சரிந்து, 1.14 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.



'ஜென்சால் மின் வாகன ஆலையில் எந்த உற்பத்தியும் நடக்கவில்லை'




மஹாராஷ்டிர மாநிலம் புனேவின் சகன் நகரில் உள்ள ஜென்சால் மின் வாகன உற்பத்தி ஆலையில், எந்தவிதமான உற்பத்தியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அங்கு மூன்று பணியாளர்கள் மட்டுமே இருந்தது, தேசிய பங்கு சந்தை நடத்திய ஆய்வில் தெரிய வந்துஉள்ளதாக செபி தெரிவித்து உள்ளது.



தேசிய பங்கு சந்தையில் 84 லட்சம் திய டிமேட் கணக்குகள் சேர்ப்பு

பு


தேசிய பங்கு சந்தையில், கடந்த நிதியாண்டில் 84 லட்சத்திற்கும் அதிகமான டிமேட் கணக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20.50 சதவீதம் அதிகரித்து, மொத்த எண்ணிக்கை 4.92 கோடியாக உயர்ந்துள்ளது. புதிய டிமேட் கணக்குகளில், 'க்ரோ மற்றும் ஏஞ்சல் ஒன்' என்ற டிஜிட்டல் தரகு நிறுவனங்கள் வாயிலாக மொத்தம் 48.6 லட்சம் கணக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Advertisement