பணம் தர மறுத்த தாயை அடித்து கொன்ற மகன்

மைசூரு: மைசூரு மாவட்டம், பிரியப்பட்டணா தாலுகாவின் நவலுாரா கிராமத்தில் வசித்தவர் ஜெயம்மா, 60. இவர் தன் கணவர், மகன் சாமி, 40, உடன் வசிக்கிறார். ஜெயம்மாவின் கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவ சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டது.

எனவே மாடுகளை விற்று, 90,000 ரூபாய் வைத்திருந்தார். இவரது மகன் சாமி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தாயிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட சாமி, பணத்தை கொடுக்கும்படி அவ்வப்போது நச்சரித்தார். கணவரின் சிகிச்சைக்காக பணம் தேவை என்பதால், மகனுக்கு தர மறுத்து புத்திமதி கூறினார்.

நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தாயிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். தர மறுத்ததால் அவரை கையால் கண் மூடித்தனமாக தாக்கி, கொலை செய்தார். தகவல் அறிந்து அங்கு வந்த, பைலுகுப்பே போலீசார் சாமியை கைது செய்தனர்.

Advertisement