ஹோமியோபதி ஆய்வு மையம் பா.ஜ., - எம்.பி., மஞ்சுநாத் தகவல்

பெங்களூரு: 'கர்நாடகாவில் ஹோமியோபதி ஆய்வு மையம் அமைப்பது குறித்து, மத்திய ஆயுஷ் துறையுடன் ஆலோசனை நடத்தப்படும்,'' என பா.ஜ., - எம்.பி., மஞ்சுநாத் தெரிவித்தார்.
கர்நாடக ஹோமியோபதிக் மெடிக்கல் அசோசியேஷன் சார்பில், பெங்களூரில் நேற்று நடந்த உலக ஹோமியோபதி தின நிகழ்ச்சியை, எம்.பி., மஞ்சுநாத் துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
ஹோமியோபதி சிகிச்சை நடைமுறை குறித்து, ஆழமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். கர்நாடகாவில் ஹோமியோபதி ஆய்வு மையம் அமைப்பது குறித்து, மத்திய ஆயுஷ் துறையுடன் ஆலோசனை நடத்தப்படும். ஹோமியோபதி சிகிச்சை முன்னேற்றம் அடைய, இந்த மையம் உதவியாக இருக்கும்.
மாநில ஹோமியோபதி சங்கத்தின் கோரிக்கைப்படி, மத்திய ஆயுஷ் துறையுடன் பேச்சு நடத்துவேன். அலோபதி, நேச்சுரோபதி மற்றும் ஹோமியோபதி இடையே போட்டி அதிகரித்துள்ளது.
அதே வேளையில் மருத்துவ சேவையின் தரமும் குறைகிறது. டாக்டர்கள், நோயாளிகளுடன் கலந்து பேசி, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிவது இல்லை.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில், மருத்துவ கல்லுாரியில் கல்வித்தரம் குறைகிறது. இதை தரம் உயர்த்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும். மத்திய, மாநில அரசுகள், மருத்துவ கல்லுாரிகளுக்கு கட்டடம் எழுப்புவதுடன், தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
தாலுகா, மாவட்ட மருத்துவமனைகள், மல்ட்டி ஸ்பெஷாலிட்டி உட்பட மற்ற மருத்துவமனைகளில் காலியாகவுள்ள, 40 சதவீதம் மருத்துவ ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு