அடிப்படை வசதியில்லாத திருநின்றவூர் பஸ் நிலையம்

திருநின்றவூர்:திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக திருநின்றவூர் பேருந்து நிலையம் செயல்படுகிறது. 2017 ல், திருவள்ளூர் எம்.பி., மேம்பாட்டு நிதியின் கீழ், 32.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. 2020 ல் சிமென்ட் தரை மற்றும் பயணியர் இருக்கை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பேருந்து நிலையம் போதிய பராமரிப்பு இல்லாமல், குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள கழிப்பறை பல மாதங்களாக மூடியே கிடக்கிறது. ஆழ்துளை கிணறு, பழுதாகி ஓராண்டு ஆகியும் சரி செய்யவில்லை. தண்ணீர் தொட்டியும் பராமரிப்பில்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.

கழிப்பறை வசதி இல்லாததால், பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பேருந்து நிலைய மறைவில் சென்று இயற்கை உபாதை கழிக்கும் அவலம் உள்ளது.

திருநின்றவூர் நகராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

 ஆவடி காமராஜர் நகரில் நடுநிலைப்பள்ளி அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடை துருப்பிடித்து இருக்கைகள் இன்றி காட்சியளிக்கிறது. இதனால், பயணியர், பேருந்துக்காக மழை, வெயிலில் நிழற்குடைக்கு வெளியில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் நிழற்குடை உள்ளே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement