மாவட்டத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை
திருப்புத்துார்: திருப்புத்துார் அமல அன்னை சர்ச்சில் ஈஸ்டர் விழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார். இந்நாளை தான் கிறிஸ்தவர்கள் ஈஸ்டராக கொண்டாடி வருகின்றனர். அமல அன்னை சர்ச்சில் பாதிரியார் அற்புத அரசு தலைமையில் நள்ளிரவில் நடத்தப்பட்ட சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இசைக் கருவிகள் முழங்க, கோல்கோதா மலையில் இருந்து சிலுவை கொடியை கையில் தாங்கியவாறு, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி, தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது. கைதட்டி, பாடல் பாடி உயிர்த்தெழுந்த ஆண்டவரை உற்சாகமாக வரவேற்றனர்.
பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, திரு ஒளி வழிபாடு, இறைவார்த்தை வழிபாடு, ஞானஸ்தான வழிபாடு மற்றும் உயிர்ப்பு ஞாயிறு கூட்டு திருப்பலியும், மறையுரையும் பாதிரியார்கள் ஸ்டான்லி, அமுல் பங்கேற்றனர்.
தேவகோட்டை: ராம்நகர் உலக மீட்பர் சர்ச்சில் பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்தார். பாதிரியார் அருளானந்தம் மறையுரை ஆற்றினார். சகாய அன்னை சர்ச்சில் வட்டார அதிபர் சந்தியாகு தலைமை வகித்தார். புளியால் பெரியநாயகி அன்னை சர்ச்சில் பாதிரியார் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
திருப்புவனம்: தெய்வீக ஆராதனை ஜெப வீடு சார்பாக ஈஸ்டர் ஞாயிறு சிறப்பு ஊர்வலம் நடந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் - வெள்ளிக்கிழமையில் இருந்து உயிர்த்தெழுந்த 3ம் நாள் ஞாயிறு ஈஸ்டர் ஞாயிறு ஆக கொண்டாடப்படுகிறது. நேற்று காலை திருப்புவனம் இந்திராநகரில் தெய்வீக ஆராதனை ஜெப வீட்டில் இருந்து கிறிஸ்துவர்கள் நகர வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். சர்ச்சில் போதகர் ஜஸ்டின் ஜெபராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு