தி.மு.க., பொதுக்கூட்டம்

தேவகோட்டை: தேவகோட்டை அருகே முப்பையூரில் தி.மு.க., தெற்கு ஒன்றியம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரவி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன், இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம், நகர் செயலாளர் பாலமுருகன் பங்கேற்றனர்.

அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது, முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின் நடைபெற்ற ஆட்சியில் தமிழகத்தின் பல உரிமைகள் பறிக்கப்பட்டன.

மீண்டும் அந்த ஆட்சி அமைய வேண்டும் என அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளனர். தமிழக உரிமை, தமிழின் பெருமை காக்க வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் தி.மு.க.,வை தொடர்ந்து மக்கள் ஆதரிக்க வேண்டும். மீண்டும் அடிமை அ.தி.மு.க., ஆட்சி அமைந்துவிட கூடாது. எதிர்கட்சி கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்றார்.

Advertisement