தாம்பரம் பெண்கள் உதவி மையத்தில் காலி பணியிடம்
சென்னை:பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் சார்பில், ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் பெண்கள் உதவி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம் மற்றும் உளவியல் உள்ளிட்ட பணிகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
அதன்படி, தாம்பரம் சானடோரியம் சேவை மையத்தில், ஒரு பாதுகாப்பாளர், இரண்டு பன்முக உதவியாளர் பணியிடங்கள் உள்ளன.
பணியிடத்திற்கான விண்ணப்பத்தை, https://chennai.nic.in/ என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து, இம்மாதம் 30ம் தேதிக்குள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில், நேரடியாகவோ, oscchennaib@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அனுப்பலாம். இந்த தகவலை, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement