வண்டிப் பாதையான ஆதிதிராவிடர் மயானம்

அலங்காநல்லுார்: கொண்டையம்பட்டியில் ஆதி திராவிடர் சமுதாய மயானத்தை வண்டிப் பாதையாகவும், உடல்கள் அடக்கம் செய்த இடத்தை வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் மாற்றி உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்

அலங்காநல்லுார் ஒன்றியம் கொண்டயம்பட்டி ஊராட்சியில் 250 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றன.

அலங்காநல்லுார் மெயின் ரோட்டில் உள்ள பொது மயானத்தில் இறந்தோர் உடலை எரிக்க தகரம் மற்றும் சிமென்ட் கொட்டகை உள்ளது. அதனருகே உள்ள ஆதிதிராவிட மயானத்தில் எந்த வசதியும் இல்லை. மழை நேரங்களில் பிளக்ஸ் பேனர்களால் கூரை அமைத்து எரியூட்டுகின்றனர்.

இவ்வூரைச் சேர்ந்த மூக்கையா கூறுகையில், ''மாயனம் ஆக்கிரமிப்பில் உள்ளது.

மயான பகுதியை வயல்களுக்கு வாகனங்கள் செல்லும் பாதையாக பயன்படுத்துகின்றனர்.

உடல் அடக்கம் செய்த இடத்தை டூவீலர் 'பார்க்கிங்'காக பயன்படுத்துகின்றனர்.

மயானத்தை அளவீடு செய்து தகன மேடை, சுற்றுச்சுவர் அமைக்க 6 மனுக்கள் அளித்தும் பயனில்லை. எங்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தரவேண்டும்'' என்றார்.

Advertisement