'நீட் விவகாரத்தை பழனிசாமி சட்டசபையில் பேசட்டும்'

வேலுார் : “நீட் தேர்வு விவகாரம் குறித்து தைரியமிருந்தால், பழனிசாமி சட்டசபையில் பேசட்டும்,” என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலுார் மாவட்டம் சேவூரில், 6.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காங்கேயநல்லுார் - அம்முண்டி வரை கால்வாயை துார்வாரும் பணி நிறைவு பெற்று, பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அமைச்சர் துரைமுருகன் கால்வாயை திறந்து வைத்து பேசுகையில், “தமிழகத்தில் தொழிலாளர் பிரச்னை இல்லாவிட்டாலும், எட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தமிழகத்தில் மூடியே கிடக்கின்றன. ஆனால், காட்பாடி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மட்டும், என் திறமையால் இயக்கச் செய்துள்ளேன்,” என்றார்.
பின், அவர் அளித்த பேட்டி:
கர்நாடகா அரசு, மேகதாது அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க மத்திய அரசிடம் பணம் செலுத்தியது. அதனாலேயே, அதை தயாரித்து வழங்கியுள்ளனர். அதனால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், மத்திய அரசின் நான்கு கமிட்டிகள், கர்நாடக அரசு கோரிக்கையை ஏற்காமல், திருப்பி அனுப்பி விட்டன. சுற்றுச்சூழல் துறை, மத்திய நீர்வளத்துறை அனுமதி வழங்கவில்லை. தமிழகத்தின் ஒத்துழைப்பு இன்றி, ஒருநாளும் கர்நாடக அரசால் மேகதாது அணை கட்டவே முடியாது.
முல்லை பெரியாறு பிரச்னை குறித்து முழுதுமாக எதுவும் தெரியாமல், எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பேசி வருகிறார். முல்லை பெரியாறு அணை தொடர்பாக, வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
அப்படி இருக்கும்போது, கேரள அரசை கண்டித்து, தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்கிறார் பழனிசாமி. தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக இப்படி பேசுகிறாராம். நல்ல வேடிக்கை.
தைரியம் இருந்தால், நீட் விவகாரம் குறித்து, தமிழக சட்டசபையில் அ.தி.மு.க.,வின் பழனிசாமி பேச வேண்டும். பேசினால், அவருடைய தைரியத்தை பாராட்டலாம்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு