கவர்னர் ஒரு தபால்காரர்: ஸ்டாலின் பேட்டி

சென்னை:
தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி: துணை முதல்வராக உதயநிதியின் செயல்பாடுகளை, இந்தியாவே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அவர் எப்படி செயல்படுகிறார் என கேட்டால், ஆட்சி அதிகாரத்தில் எனக்கு துணையாக இருந்து சிறப்பாக செயல்படுகிறார்.
தமிழக மக்களுக்கும் சேவை செய்து, அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடைய உதவுகிறார்.
கூட்டணி கட்சிகளின் ஆலோசனைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துக்கள் யாரிடம் இருந்து வந்தாலும், அவற்றை அப்படியே எடுத்துக் கொள்கிறோம்; மக்களுக்கான அரசாக செயல்படுகிறோம்.
கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பையும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் எப்போதும் மதிக்கிறேன்.
மத்திய- -மாநில அரசுகளுக்கு இடையே கவர்னர் என்பவர் தபால்காரர் போல் செயல்படக் கூடியவர்தான். சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இதைத்தான் சொல்லி இருக்கிறது.
ஆட்சியை பிடிக்க விரும்பிய அ.தி.மு.க., தலைவர்கள், பா.ஜ.,வின் விருப்பப்படி, தமிழகத்தின் மீது நீட் தேர்வை திணித்தனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


