நெட்டப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் குறை கேட்பு மக்கள் மன்ற முகாம்

திருபுவனை: நெட்டப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் குறை கேட்பு மக்கள் மன்ற சிறப்பு முகாம் மேற்கு பகுதி எஸ்.பி., வம்சிதரெட்டி தலைமையில் நேற்று நடந்தது.
நிகழச்சியில் பயிற்சி எஸ்.பி., ஷிவம், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன், வில்லியனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா,காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
எஸ்.பி., வம்சிதரெட்டி பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று நேரில் விசாரணை நடத்தினார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரவு ரோந்துப் பணியை தீவிர படுத்த வேண்டும். போதை மற்றும் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி., வம்சிதரெட்டி அறிவுறுத்தினார்.