பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது

காரைக்கால்: காரைக்கால் கோவில் பத்து வேட்டைக்காரன் சந்திப்பு அருகில் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையில் செல்லும் இளம் பெண்களை பாட்டு பாடி கிண்டல் செய்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் பட்டினச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரதீப், 25; என்பவர் பெண்களை கிண்டல் செய்து அநாகரீகமாக செயல்பட்டதாக நகர போலீசார் பிரதீப் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisement