தாய், மகள்கள் விபத்தில் காயம்
பாகூர்: புதுச்சேரி திலாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பெருமாள்ராஜா மனைவி ஜெயபுனிதா 32; இவர், கடந்த 17ம் தேதி காலை தனது டி.வி.எஸ். ஜூப்பிடர் ஸ்கூட்டரில், தனது மகள்கள் இளமதி 12; இலக்கியா 14; ஆகியோரை அழைத்து கொண்டு, சோரியாங்குப்பத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
புதுச்சேரி - கடலுார் சாலை அரியாங்குப்பம் சந்திப்பு அருகே சென்ற போது, பின்னால் வந்த ஹீரோ ேஹாண்டா கிளாமர் பைக், முந்தி செல்ல முயன்றபோது, ஜெயபுனிதா ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது.
இதில், நிலை தடுமாறி ஜெயபுனிதா, மற்றும் அவரது மகள்கள் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, ஜெயபுனிதா தாய் புஷ்பா அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.