குண்டும், குழியுமான தார்ச்சாலை; அவதிப்படும் வாகன ஓட்டிகள்

பவானிசாகர்: பவானிசாகர், புங்கார், முடுக்கன்துறை, தொப்பம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் சத்தியமங்கலம் செல்வதற்கு, முடுக்கன்துறை சந்தையில் இருந்து எரங்காட்டூர் சாலையை இணைக்கும், 1.50 கி.மீ., நீள ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான தார்ச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அதிக போக்குவரத்துள்ள சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. இதனால் குண்டு, குழியாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விபத்தும் ஏற்படுகிறது. மழை காலங்களில் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகளை வதைக்கிறது.

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் பராமரித்து வந்த நிலையில், மூன்றாண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை துறை வசம் சாலையை ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றினர். சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், நெடுஞ்சாலை துறை நிர்வாகம் சாலையை தனது கட்டுப்பாட்டில் எடுத்தபிறகு பராமரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement