ஆட்டை கொன்ற மர்ம விலங்கால் பீதி

டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி குண்டேரிப்பள்ளம் அணை அருகேயுள்ள வினோபா நகர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. கால்நடை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வனத்தை வழக்கம்போல் மேய்ச்சல் முடிந்து, பட்டியில் ஆடுகளை அடைத்து சென்றார்.

நேற்று காலை பட்டிக்கு சென்றபோது ஒரு ஆடு இறந்து கிடந்தது. ஒரு ஆட்டை காணவில்லை. அவர் தகவலின்படி சென்ற டி.என்.பாளையம் வனத்துறையினர், அப்பகுதியில் ஏதாவது விலங்கின் கால் தடம் தென்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். கடந்த இரு வாரமாக, வினோபாநகர், கொங்கர்பாளையம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மர்ம விலங்குக்கு ஆடு பலியானது, அச்சத்தை அதிகரித்துள்ளது.

Advertisement