'ஒரே விலையை நிர்ணயித்து சிமென்ட், ஸ்டீல் விற்பனை'
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒரே விலையை நிர்ணயம் செய்து சிமென்ட் மற்றும் ஸ்டீல் விற்பனை செய்வது என்று திருப்பூர் மாவட்ட சிமென்ட் மற்றும் ஸ்டீல் வியாபாரிகள் நலச்சங்கம் தீர்மானித்துள்ளது.
புதிதாகத் துவங்கப்பட்டுள்ள இச்சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று கூத்தம்பாளையம் ஆண்டவர் மகாலில் நடந்தது.
தலைவராக ராமசாமி; செயலாளர் மோகன்குமார்; பொருளாளர் இளங்கோ ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றனர். துணை தலைவர் ரமேஷ்; இணை செயலாளர் பாலு மற்றும் 22 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். சங்க முன்னோடி ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். பின், சங்க முதல் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க வளர்ச்சி; புதிய உறுப்பினர் சேர்க்கை; மாவட்டம் முழுவதும் ஒரே விலையை நிர்ணயம் செய்து சிெமன்ட் மற்றும் ஸ்டீல் விற்பனை என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
விண்வெளியில் செயற்கைகோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றி; மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
-
கோவை வருகிறார் விஜய்; ஏப்.,26, 27ம் தேதி த.வெ.க., பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பு!
-
இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்: உற்சாக வரவேற்பு
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்