பாதாள சாக்கடை பணி துவங்க மாஜி எம்.எல்.ஏ., ஏற்பாடு

புதுச்சேரி: வேல்ராம்பட்டில் நிறுத்தப்பட்ட பாதாள சாக்கடை பணியை துவங்க, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் ஏற்பாடு செய்தார்.

வேல்ராம்பட்டு ஏரிக்கரை வீதியில் பொதுப்பணித்துறை மூலம் பாதாள சாக்கடை பணி நடந்து வந்தது. பல்வேறு காரணங்களால், அந்த பணி சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இது பற்றி அப்பகுதி பொதுமக்கள் முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கரிடம் முறையிட்டு, பணியை துவக்கி துரிதமாக நடத்த வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாருடன், முன்னாள் எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராமல் பணியை துவக்க வேண்டும் என, வலிறுத்தினார்.

அதையடுத்து, அதிகாரி நிறுத்தப்பட்ட பணியை துவங்க உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement