பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா சிறப்பாக நடக்க 15 கிடா வெட்டி விருந்து அளித்த அமைச்சர்

திருச்சி : திருச்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா சிறப்பாக நடக்க வேண்டி, ஒண்டி கருப்பசாமி கோவிலுக்கு, 15 கிடாக்கள் வெட்டி, கட்சி நிர்வாகிகளுக்கு கறி விருந்து அளித்தார், அமைச்சர் நேரு. 'முறையான அழைப்பு இல்லை' என, கட்சி நிர்வாகிகள் பலர், இதில் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருச்சி பஞ்சப்பூரில், 40 ஏக்கர் பரப்பில், 492 கோடி ரூபாய் செலவில், 2022ல் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவங்கியது. மூன்றாவது ஆண்டாக நடந்து வரும் பணிகள் முடிந்து, வரும் மே, 9 அன்று முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்படுகிறது.
பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா சிறப்பாக நடக்க வேண்டி, அப்பகுதியில் உள்ள ரெட்டமலை ஒண்டி கருப்பசாமி கோவிலில், நேற்று, 15 ஆட்டு கிடாக்கள் வெட்டி, அமைச்சர் நேரு வழிபாடு நடத்தினர்.
இதற்காக நேற்று காலை, 9 மணிக்கு, ஒண்டி கருப்பசாமி கோவிலுக்கு வந்த அமைச்சர் நேரு, அங்கு வழிபாடு நடத்தி, கிடாக்கள் வெட்டும் வரை இருந்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கடும் அதிருப்தி
வேண்டுதலுக்காக வெட்டப்பட்ட கிடாக்கள் மற்றும் 250 கிலோவுக்கு மேல் கோழிக்கறி சமைக்கப்பட்டு, கோவில் வளாகத்திலேயே, தி.மு.க., கட்சி நிர்வாகிகளுக்கு, நேற்று மதியம் கறி விருந்தளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை, அமைச்சர் நேரு அறிவுறுத்தலில், திருச்சி மத்திய மாவட்ட துணை செயலர் முத்துச்செல்வம் செய்திருந்தார்.
இவர், கட்சியில் தனக்கு பிடிக்காத நிர்வாகிகளுக்கு விருந்து குறித்து முறையாக தெரிவிக்கவில்லை என்பதால், திருச்சி மேற்கு தொகுதி கட்சி நிர்வாகிகள் பலரும், விருந்து விவகாரத்தில் அமைச்சர் நேரு மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.




மேலும்
-
இன்றுடன் கெடு நிறைவு; இன்னும் கொடி பறக்குது!
-
கால்நடை மருந்தகங்களில் விவசாயிகளுக்கு உலர் தீவனம் வழங்க வேண்டுகோள்
-
பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அமைக்க பூஜை
-
அரூர் கடைவீதியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் அவதி
-
கோவிலுாரில் 177ம் ஆண்டு பாஸ்கு பெருவிழா திருப்பலி
-
'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெறாது'