அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி விமர்சித்து தி.மு.க., பிரசாரம்

செஞ்சி: செஞ்சியில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை விமர்சித்து தி.மு.க., வினர் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தனர்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியினர் இதற்கு முன்பு தமிழகத்திற்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து, செஞ்சி தி.மு.க., வினர் மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று மாலை செஞ்சி பகுதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், நகர செயலாளர் கார்த்திக், நிர்வாகிகள் செயல்மணி, பாஷா, சம்பத், சேகர், அன்புச்செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement