பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகளால் அச்சம்

கூடலுார். : கூடலுார் இருவயல் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தி நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கூடலுார், தொரப்பள்ளி பகுதியில், முகாமிட்டுள்ள காட்டு யானைகள், குனில், அல்லுார்வயல், இருவயல் பகுதிகளில் இரவில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வன துறையினர் கண்காணித்து விரட்டினாலும், ஊருக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை. இந்நிலையில், இரவில் இருவயல் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள், எல்டோ, மத்தையா ஆகியோர் விவசாய தோட்டத்தில் நுழைந்து, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. விவசாயிகள் சப்தமிட்டு யானையை விரட்டினர்.

தொடர்ந்து, யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி, நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், 'காட்டு யானைகள் விவசாய தோட்டத்தில் நுழைந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி, நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. நஷ்டத்தை ஈடு செய்ய அரசு இழப்பீடு வழங்குவதுடன், யானைகள் விவசாயிகள் தோட்டம், குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement