அரசு பஸ்சின் சக்கரம் கழன்று சாலையில் ஓடியது: பயணிகள் அதிர்ச்சி

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே ஓடிக் கொண்டிருந்த அரசு பஸ்சில், சக்கரம் கழன்று தேசிய நெடுஞ்சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சியில் இருந்து நேற்று மாலை, 6:00 மணியளவில், அரசு பஸ் ஒன்று, 22 பயணியருடன் கடலுார் சென்றது. டிரைவர் தனசேகரன், கண்டக்டர் குபேரசெல்வம் பணியில் இருந்தனர்.
தியாகதுருகம் அடுத்த பிரதிவிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, திடீரென பஸ்சின் முன்பக்க சக்கரம் கழன்று, தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. இதனால் பதற்றமான டிரைவர், பிரேக் போட்டு பஸ்சை நிறுத்த முயன்றார்.
அப்போது, பஸ் ஒருபுறமாக சாய்ந்து, சாலையில் தேய்த்தபடி சிறிது துாரம் ஓடி நின்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கழன்று ஓடிய சக்கரம், 100 அடி துாரத்தில் சாலையோர பள்ளத்தில் விழுந்தது.
அந்த நேரத்தில் சாலையில் யாரும் வராததால் பாதிப்பு இல்லை. தியாகதுருகம் போலீசார், பயணியரை பத்திரமாக மற்றொரு பஸ்சில் அனுப்பி வைத்தனர்.











மேலும்
-
இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்: உற்சாக வரவேற்பு
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி