4 புதிய டவுன் பஸ்கள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் இயங்கிய பழைய பஸ்களுக்கு பதிலாக, புதிய 4 டவுன் பஸ்கள் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரத்தில் இருந்து தென்பேர் (தடம் எண்.12 ஜெ), எசாலம், (21 டி), அனந்தபுரம் (8 கே) ,ஏழு செம்பொன் (81) என 4 வழித்தடங்களில் இயங்கிய பழைய பஸ்களுக்கு பதிலாக, புதிதாக வாங்கப்பட்ட டவுன் பஸ்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேமூரில் நடந்தது. அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி புதிய பஸ்கள் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, கலைச்செல்வி, துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம்.
ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், மும்மூர்த்தி, முருகன் , நகர செயலாளர் நைனா முகமது, மாவட்ட கவுன்சிலர்கள் மீனா வெங்கடேசன், முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் முகிலன் அருணாசலம், பாரதி , செல்வம், சாவித்திரி.
மாவட்ட பிரதிநிதி முரளி, கில்பட் ராஜ், வேல்முருகன், அசோக் குமார், சுதாகர், பொறியாளர் அணி சுரேஷ், தொழில்நுட்ப அணி சாம்பசிவம், வி.சி., ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், கிட்டு.
நகர அமைப்பாளர் சந்துரு, இந்திய கம்யூ., பாலசுப்ரமணி, கலியமூர்த்தி, அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஜெயச்சங்கர், துணை மேலாளர் சிவகுமார் , கிளை மேலாளர்கள் முருகன், விஸ்வநாதன், ரங்கராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.