பட்டா வழங்க கோரி மனு

விழுப்புரம்: அரகண்டநல்லூர் பேரூராட்சி மக்கள், தங்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி மனு அளித்தனர்.

அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதி பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:

அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளில் வீடுகள் இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க கோரி, ஏற்கெனவே பல முறை மனு அளித்திருந்தோம்.

அதனடிப்படையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு இடம் தேர்வு செய்து, 46 பேருக்கு பட்டா வழங்க அரசு தரப்பில் அளவீடு செய்யப்பட்டு, அளவு கல் நட்டு சென்றனர்.

ஆனால், உரிய பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் உள்ளிட்ட அலுவலர்களிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், வீட்டுமனைப் பட்டா வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement