நடிகர் சிவாஜி கணேசன் வீட்டின் ஜப்தி உத்தரவு ரத்து

8


சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.


சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தார். இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.

இந்த கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் 'அன்னை இல்லம் எனது வீடு கிடையாது. தம்பி பிரபுவின் வீடு எனவே தடையை ரத்து செய்ய வேண்டும்' என்று மனு செய்தார்.



இதற்கிடையே, நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவு ரத்து செய்ய கோரி நடிகர் பிரபு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று (ஏப்ரல் 21) விசாரித்த உயர்நீதிமன்றம், ''நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர்'' என்பதை உறுதி செய்தது.


பின்னர் வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement