10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் போனஸ் மதிப்பெண்

சென்னை: பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் 4வது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே 1 மதிப்பெண் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சமீபத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்தது. அதில் சமூக அறிவியல் தேர்வில் ஒரு மார்க் கேள்விகளில் 4வது கேள்வியாக ஜோதிபா புலே குறித்த கேள்விக்கு வாக்கியங்கள் முரணாக இருந்தது.

கூற்று என்று அதாவது ஜோதிபா புலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார் என்றும்

காரணம் என்று ஜோதிபா புலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கு மதிப்பெண் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் நிலையில் தேர்வு துறை இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


ஒரு மார்க் கேள்விகளில் 4வது கேள்வியாக உள்ள அந்த கேள்வியை மாணவ, மாணவிகள் அட்டென்ட் செய்திருந்தாலே 1 மதிப்பெண் போனஸாக வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Advertisement