மஹாராஷ்டிரா முதல்வர் நிலைப்பாடு; ஸ்டாலின் கேள்வி

2

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு:

மூன்றாம் மொழியாக ஹிந்தியை திணிக்க பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மாநிலத்தில் மராத்தி மட்டுமே கட்டாயம் என, இப்போது கூறுகிறார்.

ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி திணிக்கப்படுவதற்கு எதிராக, பொதுமக்களின் பரவலான கண்டனம் குறித்து, அவர் கொண்டிருக்கும் அச்சத்தின் தெளிவான வெளிப்பாடு இதுவாகும்.

பிரதமரும், மத்திய கல்வி அமைச்சரும், இந்த விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின்கீழ், மஹாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி தவிர, வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா?

அப்படியானால், மூன்றாவது மொழியை கட்டாயமாகக் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதிப்படுத்தும் தெளிவான உத்தரவை, மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்குமா? மும்மொழிக் கொள்கையை காரணம் காட்டி, தமிழகத்திற்கு அநியாயமாக 2,152 கோடி ரூபாய் நிறுத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement