ஊராட்சி தலைவரை தாக்க முயற்சி

கண்டமங்கலம் : விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் உள்ளது. நேற்று மாலை, கண்டமங்கலம் ஒன்றியம், பள்ளித்தென்னல் ஊராட்சி தலைவர் பத்மநாபன், அ.தி.மு.க., ஒன்றிய பாசறை செயலாளர் சின்னபாபுசமுத்திரம் பத்மநாபன் இருவரும் டோல்கேட் வழியாக சென்றனர்.

உள்ளூர்வாசி என்றும், ஊராட்சி தலைவர் என்று கூறி, கட்டணத்தில் விலக்கு அளிக்க கூறினார். அதை ஏற்றுக்கொள்ளாதி டோல்கேட் ஊழியர்கள் நீங்கள், உள்ளூர்வாசி இருந்தாலும், ஊராட்சி மன்ற தலைவராக இருந்தாலும், கட்டணம் செலுத்திய பிறகே செல்ல முடியும் என, கூறினர்.

இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. டோல்கேட் ஊழியர்கள் ஒன்று திரண்டு ஊராட்சி தலைவர், அ.தி.மு.க., நிர்வாகி இருவரையும் தாக்க முயன்றனர். பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Advertisement