தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது

திண்டிவனம்,: திண்டிவனத்தில் தட்டு வண்டியில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்இன்ஸ்பெக்டர்கள் செல்வதுரை, ஐயப்பன் ஆகியோர், நேற்று மாலை 6:00 மணிக்கு, திண்டிவனம்-மயிலம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளுடன் பொருத்தப்பட்ட தட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். தட்டு வண்டியில் 265 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
தட்டுவண்டியை ஓட்டி வந்த மயிலம் ஜெ.ஜெ., நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சக்திவேல், 25; என்பவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சக்திவேல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சித்ரா பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோவில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
-
ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
சத்தீஸ்கரில் முகாமில் மின்சாரம் தாக்கி சி.ஆர்.பி.எப்., வீரர் உயிரிழப்பு
-
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
-
தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், அரசு பஸ் மோதல்; போக்குவரத்து பாதிப்பு
-
காங்கிரஸ் கூட்டம் 'பிளாப்' - கார்கே காட்டம்: பீகாரில் திணறும் காங்கிரஸ்; யார் பொறுப்பு ?
Advertisement
Advertisement