அரியாங்குப்பம் 14 பஞ்சாயத்துக்களில் மே 1ம் தேதி கிராம சபை கூட்டம்

அரியாங்குப்பம்: மே தினத்தை முன்னிட்டு, அரியாங்குப்பம் கொம்யூனில் உள்ள 14 பஞ்சாயத்துக்களில் வரும் 1ம் தேதி கிராம சபைக்கூட்டம் நடக்கிறது.

இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

மே 1ம் தேதி அன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பி.சி.பி., நகர் சமூதாய நலக்கூடம், அரியாங்குப்பம் கொம்யூன் அலுவலகம் எதிரில், 1ம் தேதி காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை கிராம சபைக்கூட்டம் நடக்கிறது.

அதே போல, அன்றைய தினத்தில், அரியாங்குப்பம் ஆர்.கே., நகர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில், ஓடைவெளி பிள்ளையார் கோவில், மணவெளி புருேஷாத்தம்மன் சமூதாய நலக்கூடம், தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில், ஆண்டியார்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே, டி.என். பாளையம் சமூதாய நலக்கூடம் எதிரில், நல்லவாடு சமூதாய நலக்கூடம் உள்ளிட்ட 14 கிராம பஞ்சாயத்துக்களில் கிராமசபை கூட்டம் நடக்கிறது.

இவ்வாறு, ஆணையர் கூறியுள்ளார்.

Advertisement