பெங்களூரில் இரண்டு இடங்களில் விபத்து கராத்தே பயிற்சியாளர் உட்பட 2 பேர் பலி
பெங்களூரு: பெங்களூரில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சரோஜ் பால், 49. கராத்தே பயிற்சியாளர். இவர் சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு வந்திருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு, ஒயிட்பீல்டு பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று, பைக்கின் மீது மோதியது. இதில், அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த லாரி ஓட்டுநர், லாரியை அங்கேயே விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டார்.
சம்பவம் குறித்து பெல்லந்துார் போக்குவரத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், லாரி பறிமுதல் செய்யப்பட்டது. அதன் உரிமையாளர் கண்டறியப்பட்டார். அவரிடம் ஓட்டுநர் குறித்த விபரங்களை போலீசார் பெற்றனர்.
மற்றொரு விபத்து
பெங்களூரு, குமாரசாமி லே - அவுட், வசந்தபுரா பகுதியை சேர்ந்தவர் தேவி, 49. இவர் நேற்று அதிகாலையில் வசந்தபுரா பகுதியில் உள்ள மகேஷ் பி.யு.சி., கல்லூரி அருகே உள்ள நடைபாதையில் 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி, அவர் மீது மோதியது. கீழே விழுந்த அவர் மீது லாரி ஏறியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமாரசாமி லே - அவுட் போக்குவரத்து போலீசார், லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
இருநாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி
-
புதிய போப் ஆகும் வாய்ப்பு யாருக்கு?
-
மானியம் பெற்றுத்தர லஞ்சம்; கூட்டுறவு சங்க மேலாளர் கைது; ரூ.15.89 லட்சம் பறிமுதல்
-
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்
-
பணமோசடி வழக்கு; நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
-
நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு