அரசு பள்ளியில் மின் மோட்டார் திருட்டு

கடலுார்; திருவந்திபுரம் அரசு துவக்கப் பள்ளியில் மின் விசிறிகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலுார் அடுத்த திருவந்திபுரம் அரசு துவக்கப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்களுக்கு தேர்வு முடிந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை பள்ளி அறைகள் திறந்து கிடப்பதாக திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில் 5 மின் விசிறிகள், மின் மோட்டாரை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் இதே பள்ளியில் பொருட்கள் திருடு போன நிலையில், மீண்டும் திருட்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement