பொது மருத்துவ முகாம்

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் சத்ய சாய் சேவா சமிதியில் பொது மருத்துவ முகாம் நடந்தது.

சத்ய சாய்பாபாவின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு, கடலுார் கூத்தப்பாக்கம், நெய்வேலி, விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள சாய் சமிதிகளில் மாதந்தோறும் 3வது ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்து வருகிறது.

அதன்படி, விருத்தாசலம் சத்ய சாய் சேவா சமிதியில் பொது மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவர்கள் அமிர்தா தேவி, மஞ்சுளா, பாலதண்டாயுதம் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

மாவட்ட தலைவர் சாய் பிரசாத், மாவட்ட மருத்துவ ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, குப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர். வடலுார் இந்தியன் குரூப் ஆப் இன்ஸ்டியூட் நர்சிங் காலேஜ் மாணவிகள் கலந்து கொண்டு, மருத்துவ உதவிகளை செய்தனர்.

Advertisement