வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பில் வேளாண் கல்லுாரி மாணவிகள் தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி மாணவர்கள் சேத்தியாத்தோப்பில் தங்கி வேளாண் அனுபவ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வண்டுராயன்பட்டு உயர்நிலை பள்ளியில் வேளாண் கல்லுாரி மாணவிகள் சார்பில் தண்ணீர் பாதுகாப்போம்; விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைளை ஏந்திச் சென்றனர். கல்லுாரி மாணவிகள் ஜெனிஷா, கார்த்திகா, கனிமொழி, கிருஷ்ணவாணி, கீர்த்தனா, லாவண்யா, லீனா உள்ளிட்ட மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இது தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிரானது; சுட்டிக்காட்டும் அன்புமணி
-
அப்போ டிரம்... இப்போ டிராலி சூட்கேஸ்; கணவனை கொலை செய்த மனைவி
-
ஏப்.25ம் தேதி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; இ.பி.எஸ். அறிவிப்பு
-
சென்னையில் புறநகர் ரயில் தடம்புரண்டு திடீர் விபத்து: பயணிகள் அச்சம்
-
தொகுப்பூதிய செவிலியர்களின் ஊதியம்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
'டாஸ்மாக்' மது விற்பனையால் அரசுக்கு ரூ.48,344 கோடி வருவாய்!
Advertisement
Advertisement