நாங்கள் ஓடிவிட்டோம், திரும்பிப் பார்க்கவே இல்லை: நூலிழையில் தப்பிய நாக்பூர் தம்பதி பேட்டி

ஸ்ரீநகர்: நாக்பூரைச் சேர்ந்த ஒரு சுற்றுலாத் தம்பதியினர், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த் நாக் மாவட்டத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 28 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான கொடிய பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பிய நாக்பூர் தம்பதி தங்கள் சிலிர்க்க வைக்கும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
அந்தத் தம்பதியினர், அந்த இடத்தை விட்டு வெளியேறிய சில நிமிடங்களுக்குப் பிறகு தாக்குதல் நடந்ததாக தெரிவித்தனர்.
"நீண்ட நேரம் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தனர், தப்பிக்க முயன்றனர். நாங்கள் திரும்பிப் பார்க்கவே இல்லை, நாங்கள் தப்பிக்க விரும்பினோம்," என்று அவர்கள் கூறினர்.
மேலும்
-
திருமணத்திற்கு மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது
-
காவல் நிலையம் முன் பெண் தற்கொலை கலெக்டர் அறிக்கை அளிக்க உத்தரவு
-
இளம் எழுத்தாளருக்கு பாரதிதாசன் விருது முதல்வர் அறிவிப்பு
-
மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை
-
புளி பதப்படுத்தும் தொழிலுக்கு மானியம்
-
சம்பள பாக்கி பிரச்னையால் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை