காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கர்நாடக தொழிலதிபருக்கு ஏற்பட்ட சோகம்; மனைவி கண்ணீர்

ஸ்ரீநகர்: கோடை விடுமுறையை கொண்டாட காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கர்நாடக தொழிலதிபர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சோகம் அரங்கேறி உள்ளது.
கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தை சேர்ந் மஞ்சுநாத் ராவ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு அவர் மனைவி பல்லவி மற்றும் மகனுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பல இடங்களுக்கு சென்ற அவர்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இன்ற பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்ற போது மஞ்சுநாத் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பல்லவி கூறியதாவது: நானும், மகனும் நலமுடன் உள்ளோம். எங்கள் கண் முன்னர் கணவர் இறந்துவிட்டார். பயங்கரவாதிகள் தூரத்தில் இருந்து சுட்டனர். நாங்கள் அருகே வருவதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். நானும் எனது மகனும், எங்களை கொன்றுவிடும் படி பயங்கரவாதிகளை நோக்கி கத்தினோம். ஆனால் அவர்கள் சென்றுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
பல்லவிக்கு , பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா ஆறுதல் கூறினார். தாக்குதல் சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மேலும்
-
மாணவரை டிபன் பாக்ஸால் தாக்கிய பள்ளி ஆசிரியர் தலையில் காயம்
-
குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்திய குரங்குகளை பிடித்த வனத்துறையினர்
-
நிலத்தை அளக்க ரூ.5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., தலையாரி கைது
-
'ஏம்பா நீயே பெரிய ஆளு...' கவுன்சிலரை கலாய்த்த கமிஷனர்
-
ஒரு மாத சம்பளம் இல்லையென்றால் நீங்கள் வேலைக்கு வருவீர்களா? அதிகாரிகளை வறுத்தெடுத்த விவசாயிகள்
-
தேனீக்கள் கொட்டி 20 மாணவர்கள் காயம்