ஏரியில் மூழ்கி மாணவன் பலி

ஓசூர்:கர்நாடகா மாநிலம், பெங்களூரு கே.ஆர்.புரா பகுதி உதயகுமார். மகன் சித்தார்த், 16. பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார். கோடை விடுமுறையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார் அருகே, பெலத்துாரில் உள்ள தன் பாட்டி வீட்டிற்கு, சித்தார்த் வந்திருந்தார்.


நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள ஏரியில் மாணவன் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement