பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; 26 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

4

ஸ்ரீநகர்: பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.


ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பேரதிரிச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி, உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையை நடத்தினார்.

முன்னதாக, காஷ்மீருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement