பஹல்காம் தாக்குதலுக்கு நமது அரசு நிச்சயம் பதிலடி கொடுக்கும்: அண்ணாமலை

சென்னை: பஹல்காம் தாக்குதலுக்கு நமது அரசு நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
@1brஇதுகுறித்து அவர் அளித்த பேட்டி விவரம்;
ஐ.எஸ்.ஐ., பின்னணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. நிச்சயமாக இதை கண்டிக்கின்றோம் என்று சொல்வதை விட நம்முடைய அரசு கொடுக்கக்கூடிய பதிலடி கூட இதில் முக்கியமாக இருக்கப் போகிறது.
அதனால் இந்த நேரத்தில் எல்லா மக்களும் அமைதியாக இருக்க வேண்டும். சோசியல் மீடியாவில் நிறைய விஷயங்களை பார்க்கிறோம். எல்லாரும் ஆக்ரோஷமாக பதிவு போடுறாங்க. அது தேவையில்லாதது.
அரசு, அரசு இயந்திரங்கள் என்ன செய்யணுமோ, தகுந்த நேரத்தில் அதை செய்வாங்க. நேற்றில் இருந்தே நாம் பார்க்கின்றோம். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக ஜம்மு காஷ்மீர் கவர்னர் சொல்லி இருக்கிறார்.
அதனால் அரசு நிச்சயமாக இதற்கு எந்த நேரத்தில், எப்படி பதிலடி கொடுக்க வேண்டுமோ, கொடுப்பார்கள். அதற்காக மக்கள் நாம் செய்யக்கூடிய வேலையை நிறுத்தக்கூடாது. எல்லோரும் நம் வேலையை செய்ய வேண்டும்.
காஷ்மீர் போறவங்க போகணும். நாளை நான் காஷ்மீர் போவதாக புக்(டிக்கெட்) பண்ணி இருக்கிறேன். வர்ற ஜூலை மாதம் அமர்நாத் போகிறேன். போகணும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக போக வேண்டும்.
கோழைத்தனமாக தாக்குதலுக்கு எல்லாம் பயந்து நாம் நம்முடைய வேலையை நிறுத்தினால் தான் அந்த தீவிரவாதிகளுக்கு நாம் கொடுக்ககூடிய பயமாக இருக்கணும்.
அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று அரசியல் பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். பிரதமர் மோடி 3வது முறையாக பதிவு ஏற்ற போது 2024 ஜூன் 9ம் தேதி, பதவியேற்ற அன்றைக்கே காஷ்மீரில் ஒரு பயங்கரவாத அட்டாக் இருந்தது. 8 நிமிஷம் கழிச்சி, அன்னிக்கு.
ஏன் என்றால் பாகிஸ்தானை பொறுத்தவரைக்கும், ஐஎஸ்ஐ-யை பொறுத்த வரைக்கும் இந்தியாவில் அமைதியை வந்து குலைக்கணும். அச்சுறுத்தலை ஏற்படுத்தணும் என்பதற்காக தொடர்ந்து நடத்துறாங்க.
காஷ்மீரை பொறுத்த வரைக்கும் கட்டுக்குள்ள தான் இருக்கு. இந்த துரதிருஷ்டவசமான நிகழ்வில் இந்தியர்கள் எல்லாரும் ஒன்றாக இருக்கணும். இதிலே நமது தலைவர்கள் எல்லாரும் அரசியல் பேசுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற போது முதல்கட்ட சிகிச்சைக்காக அங்குள்ளவர்தான் குதிரைகளில் வந்தனர். நாம் திரும்ப திரும்ப சொல்வது பயங்கரவாதிகளின் மனநிலை. நமக்குள் நாம் இஸ்லாம், ஹிந்து எல்லாம் ஒன்றுதான் என்று நினைத்தாலும் கூட, பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் தான் பயங்கரவாதம் செய்யறாங்க. அதை தான் நாம் கண்டிக்கின்றோம்.
நிச்சயமாக, பயங்கரவாதத்தை பயங்கரவாதமாகத்தான் பார்க்கிறோம். அரசு இயந்திரங்கள் நிச்சயமாக இதற்கு பதிலடி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 2,3 நாட்களாக பாகிஸ்தான் ராணுவ தளபதி, காஷ்மீர் எங்களின் பகுதி என்று பேசி இருக்கிறார். காஷ்மீரை சாராதவர்கள் எல்லாம் காஷ்மீருக்குள் வந்து குடியரிமை பெற்றிருக்கின்றனர் என்ற தவறான பொய்யுரையை பரப்புகின்றனர்.
அவர்களுக்கு இந்தியா வளர்வது பிடிக்கலை, அமைதியாக இருப்பது பிடிக்கலை, இந்தியாவின் முக்கியமான நேரத்தில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி 4 நாள் பயணமாக இங்கு வந்திருக்கிறார். பிரதமர் சவுதி அரேபியாவுக்கு 2 நாள் பயணமாக போயுள்ளார்.
பயங்கரவாதிக்கும், பாதுகாப்புப் படைக்கும் சண்டை நடக்கத்தான் செய்யுது. அதற்கு காலம், காலமாக பாதுகாப்புப் படை பதிலடி கொடுக்கிறாங்க. முதல் முறையாக ரொம்ப நாட்கள் கழித்து, அப்பாவி மக்களை, சுற்றுலா பயணிகளை தாக்குகிறார்கள் என்றால் அதை யார் ஏற்றுக் கொள்வார்கள். யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதில் என்ன சித்தாந்தம் இருக்கிறது. ஜீரோ சித்தாந்தம்.
கொலை செய்வது மட்டுமே சித்தாந்தமாக வைத்துக் கொண்டு 26 பேரை கொன்றிருக்கிறார்கள். இதில் ஒரு சித்தாந்தமும் இல்லை. அப்பாவியை கொல்லணும், இதன் மூலம் ஒரு ஸ்டேட்மெண்ட் சொல்லணும்.
இதை மட்டுமே முழு நேர வேலையாக வைத்திருக்கக்கூடிய தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டும். நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கு.
உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு தான் இருக்கிறார். இறந்து போனவங்களுக்கு மரியாதை, அஞ்சலி செலுத்தி இருக்கிறாங்க. அதனால் நமது அரசுக்கு எல்லாம் எந்த பயமும் இல்லை. நம்முடைய நோக்கம் எல்லாம் சாதாரண பொதுமக்கள் எல்லாம் பாதுகாப்பு இல்லாம சில இடத்தில் இருக்கிறாங்க.
நான் எந்த அமைச்சராகவும் ஆகவில்லை. இங்கு தான் இருக்கேன், உங்களுடன் தான் இருக்கேன். நம்முடைய அரசு, நிச்சயமாக ஒரு கடுமையான பதிலடி கொடுக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (15)
Narayanan Muthu - chennai,இந்தியா
23 ஏப்,2025 - 20:10 Report Abuse

0
0
Reply
Muralidharan S - Chennai,இந்தியா
23 ஏப்,2025 - 19:39 Report Abuse

0
0
Reply
Raja - Coimbatore,இந்தியா
23 ஏப்,2025 - 19:33 Report Abuse

0
0
Reply
திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன் - ,இந்தியா
23 ஏப்,2025 - 19:27 Report Abuse

0
0
சந்திரசேகரன்,துறையூர் - ,
23 ஏப்,2025 - 20:00Report Abuse

0
0
Reply
Rajathi Rajan - Thiravida Naadu,இந்தியா
23 ஏப்,2025 - 19:10 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
23 ஏப்,2025 - 19:05 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
23 ஏப்,2025 - 18:57 Report Abuse

0
0
Reply
ramesh - chennai,இந்தியா
23 ஏப்,2025 - 18:13 Report Abuse

0
0
Reply
ramesh - chennai,இந்தியா
23 ஏப்,2025 - 18:11 Report Abuse

0
0
Reply
K.n. Dhasarathan - chennai,இந்தியா
23 ஏப்,2025 - 17:52 Report Abuse

0
0
SANKAR - ,
23 ஏப்,2025 - 18:19Report Abuse

0
0
vivek - ,
23 ஏப்,2025 - 18:23Report Abuse

0
0
Narayanan Muthu - chennai,இந்தியா
23 ஏப்,2025 - 20:08Report Abuse

0
0
ramesh - chennai,இந்தியா
23 ஏப்,2025 - 21:29Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement