பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி; பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

6

புதுடில்லி: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


@1brகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சூழ்நிலையில், முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார்.


பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

பின்னர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும். ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைத்து, பயங்கரவாதிகள் ஒரு கோழைத்தனமான செயலைச் செய்தனர். இதில் நாங்கள் பல அப்பாவி உயிர்களை இழந்தோம்.


அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இந்தச் செயலைச் செய்தவர்களை மட்டுமல்ல, திரைக்குப் பின்னால் உள்ளவர்களையும் நாங்கள் கண்டுபிடிப்போம்.


குற்றவாளிகளை தப்பிக்க விடமாட்டோம். அவர்களுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

Advertisement