அரசின் மீதான தாக்குதல்

ஜம்மு- -- காஷ்மீரின் பஹல்காமில், அப்பாவி சுற்றுலா பயணியர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் வேதனை அளிக்கிறது. இது, அரசின் மீதான நேரடி தாக்குதல். இந்த கோழைத்தனமான பயங்கரவாதச் செயலையும், அதற்கு பொறுப்பானவர்களையும் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
மன்னிப்பு கோருகிறோம்
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, காஷ்மீரிகளான நாங்கள் வெட்கப்படுகிறோம். அதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம். இத்தகைய செயல்களை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் தண்டிக்க வேண்டும்.
மெஹபூபா முப்தி
தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
சுற்றுலா துறையில் கவனம்
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் நாடே வேதனையில் உள்ளது. காஷ்மீரில் பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் மீண்டும் துாண்ட சிலர் முயற்சித்துள்ளனர். சுற்றுலா துறைக்கு இதனால் ஏற்படும் பாதிப்பை குறைக்க, மத்திய சுற்றுலா அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்.
கஜேந்திர சிங் ஷெகாவத்
மத்திய சுற்றுலா துறை அமைச்சர், பா.ஜ.,


மேலும்
-
மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு; சட்டசபையில் துரைமுருகன் அறிவிப்பு
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; 32 பேர் பங்கேற்பு!
-
கோவையில் சோகம்...! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி
-
3,935 பணியிடத்துக்கு குரூப் 4 தேர்வு அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.,
-
காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி!
-
காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி